உலகின் பல்வேறு நாடுகளிலும் தபேலா இசையால் புகழ்பெற்றவர் ஜாகீர் ஹுசைன். இவர் இன்று தனது 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில்,''ஒரு தலைமுறையின் இசையை மாற்றியமைத்த இசைக் கலைஞர் ஜாகீர் ஹுசைன். எப்போதும் தபேலாவுடன் உங்களின் குரலைக் கேட்பது முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.