தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் ரசிகர்கள் முன் மீண்டும் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர்! - எல்லீஸ் பெர்ரி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லீஸ் பெர்ரியின் வேண்டுகோளை ஏற்று, சச்சின் இன்று ஒரு ஓவர் எதிர்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

sachin-bats-after-a-five-and-half-years-of-retirement
sachin-bats-after-a-five-and-half-years-of-retirement

By

Published : Feb 9, 2020, 11:25 AM IST

புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் தொடரில் பாண்டிங் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுலகர் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பலப்பரிட்சை செய்து வருகிறது.

இதனை சாக்காக வைத்து ஆஸ்திரேலிய அணியின் அனுபவ ஆல் ரவுண்டர் வீராங்கனையான எல்லீஸ் பெர்ரி, தனது ட்விட்டர் பக்கத்தில், எனது ஓவரில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

கிரிக்கெட் கடவுள்

இவரின் கோரிக்கை ஏற்ற சச்சின் டெண்டுல்கர் நேற்று ஒரு ஓவர் பேட்டிங் செய்வேன் என ஒப்புக்கொண்டார். அதன்படி புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் தொடரின் இடைவேளையில் சச்சின் பேட்டிங் செய்ய, ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரி பந்துவீசினார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் சச்சின் பவுண்டரி அடிக்க, இரண்டாவது பந்திலும் பவுண்டரி அடிக்கப்பட்டது. பின்னர் வீசப்பட்ட மூன்றாவது பந்தில் சச்சின் தனது ட்ரேட்மார்க் ஷாட்டான ப்ளிக் ஷாட்டை ஆடினார்.

ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தை மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை சதர்லேண்ட் வீசினார்.

ஐந்தரை ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் முன்னிலையில் சச்சின் பேட்டிங் செய்தது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தற்போது சச்சின் பேட்டிங் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: யு-19 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா, வங்கதேசம் இன்று மோதல்

ABOUT THE AUTHOR

...view details