தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒரே இன்னிங்ஸில் 5 கேட்ச்களைப் பிடித்த முதல் இங்கிலாந்து ஃபீல்டர்! - England vs South Africa

கேப்டவுன்: ஒரே இன்னிங்ஸில் ஐந்து கேட்ச்களைப் பிடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.

sa-vs-eng-stokes-becomes-first-england-fielder-to-take-5-catches-in-an-innings
sa-vs-eng-stokes-becomes-first-england-fielder-to-take-5-catches-in-an-innings

By

Published : Jan 5, 2020, 9:21 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் இரண்டாவது போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 269 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நடந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 215 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து களத்தில் இருந்தது. இதையடுத்து நடந்த இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனிடையே இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் கேட்ச் பிடித்ததில் ஒரு சாதனையைப் படைத்துள்ளார். அது, ஒரே இன்னிங்ஸில் 5 கேட்ச்களைப் பிடித்த முதல் இங்கிலாந்து ஃபீல்டர் என்ற சாதனையைப் படைத்தார். இவரின் சிறந்த ஃபீல்டிங்கால் தென் ஆப்பிரிக்க அணியின் ஹம்சா, டூ ப்ளஸிஸ், வான் டெர் டூசன், ப்ரிடோரியஸ், நார்ட்ஜ் ஆகியோர் ஆட்டமிழக்க பென் ஸ்டோக்ஸ் காரணமாக அமைந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களோடு, 177 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விக்கெட்டைத் தூக்க சரியாக கணித்த மேக்ஸ்வெல்!

ABOUT THE AUTHOR

...view details