தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டெஸ்ட் போட்டிகளிலிருந்து டூ ப்ளஸிஸ் ஓய்வு - Retirement

போர்ட் எலிசபெத்: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளஸிஸ் தெரிவித்துள்ளார்.

SA skipper du Plessis hints at Test retirement
SA skipper du Plessis hints at Test retirement

By

Published : Jan 21, 2020, 12:12 PM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.

மூன்றாவது போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு டூ ப்ளஸிஸ் ஆட்டம் மீதான விமர்சனங்களும், கேப்டன்சி மீதான விமர்சனமும் அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிதான் கேப்டன் டூ ப்ளஸிஸிற்கு சொந்த மண்ணில் ஆடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 'நிச்சயமாக அடுத்தப் போட்டிதான் நான் சொந்த மண்ணில் கடைசியாக ஆடும் டெஸ்ட் போட்டியாக இருக்கும். தற்போது எனது கேப்டன்சியிலிருந்து விலகமாட்டேன். இந்தத் தொடரின் பாதியிலேயே நான் விலகினால் சரியாக இருக்காது. ஒரு கேப்டன் அவ்வாறு செயல்படக் கூடாது. சில கடினமான நேரங்களையும் நாம் கடக்கவேண்டும்.

டூ ப்ளஸிஸ்

டி20 உலகக்கோப்பைக்கு பின் நான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பேன். டெஸ்ட் போட்டிகளை விடவும், ஒருநாள் போட்டிகளில்தான் நான் சிறப்பாக செயல்படுகிறேன். அதனை ஒத்துக்கொள்ளவேண்டும். டெஸ்ட் போட்டிகளில் நான் எதிர்பார்த்த அளவிற்கே என்னால் விளையாட முடியவில்லை.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ட்ரான்சிஷன் பீரியட்டில் (transition period) உள்ளது. அந்த நேரத்தில் முக்கிய வீரர்கள் கடமையை மறந்து வெளியேறக்கூடாது. இப்போது எனது கடமை அடுத்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யவேண்டும் என்பதுதான். அடுத்தப் போட்டியில் மிகவும் வலிமையான அணியாக நிச்சயம் செயல்படுவோம்' என்றார்.

இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்திய இங்கிலாந்து

ABOUT THE AUTHOR

...view details