தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் திரும்பிய அதிரடி படை! - இரண்டு டி20 போட்டிகள்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பெயரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Russell, Thomas, Allen, Hope return to Windies T20I squad against Sri Lanka
Russell, Thomas, Allen, Hope return to Windies T20I squad against Sri Lanka

By

Published : Feb 23, 2020, 7:55 AM IST

Updated : Feb 23, 2020, 8:17 AM IST

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்நிலையில் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் 14 பேர் கொண்ட பட்டியலை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் மீண்டும் டி20 அணியில் இடம்பிடித்து அசத்தியுள்ளார். சமீப காலமாக உடல்தகுதி சோதனையில் தேர்ச்சியடையாமல், அணியில் இடம்பிடிக்காமலிருந்த ரஸ்ஸல், தற்போது தேர்ச்சி பெற்று மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிரடியில் இறங்கவுள்ளார்.

அதேபோல் தொடக்க ஆட்டக்காரரான ஷாய் ஹோப், ஆலன் உள்ளிட்டோரும் மீண்டும் டி20 அணிக்குத் திரும்பியுள்ளனர். அதேசமயம் கடந்த வாரம் கார் விபத்திலிருந்து தப்பிய வேகப்பந்து வீச்சாளர் தாமஸ், இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளதால் ரசிகர்களின் கவனம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீது தற்போது திரும்பியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி விவரம்:பொல்லார்ட் கேப்டன்), பேபியன் ஆலன், டுவெய்ன் பிராவோ, ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரான் ஹெட்மையர், ஷாய் ஹோப், பிராண்டன் கிங், நிக்கோலஸ் பூரண், ரோவ்மன் பவல், ஆண்ட்ரே ரஸ்ஸல், சிம்மன்ஸ், தாமஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

இதையும் படிங்க:முதலாவது ஒருநாள்: இறுதி ஓவரில் திரில் வெற்றிபெற்ற இலங்கை!

Last Updated : Feb 23, 2020, 8:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details