தற்போதைய நவீன கிரிக்கெட்டில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில், ஒவ்வொரு தொடர்களிலும் தனது சிறப்பான பேட்டிங்கால் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
10 ஆண்டுகளில் 20, 000 ரன்கள்... ரன்மெஷின் கோலி சாதனை..!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 43ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், 10 ஆண்டுகளில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள், டி20) 20,000 ரன்களை குவித்த முதல் பேட்ஸ்மேன் என்ற மைல்கல் சாதனையை அவர் படைத்துள்ளார். அதிலும், இச்சாதனை படைக்க அவர் 386 போட்டிகளை மட்டுமே எடுத்துக்கொண்டது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இதன்மூலம், தான் கிரிக்கெட்டின் 'ரன்மெஷின்' என்பதை மீண்டும் மீண்டும் கோலி நிரூபித்தியுள்ளார்.
10 ஆண்டுகளில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேன்கள்
- விராட் கோலி (இந்தியா) - 20, 502 ரன்கள்
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 18, 962 ரன்கள்
- காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 16,777 ரன்கள்
- ஜெயவர்தனா (இலங்கை) - 16, 304 ரன்கள்
- குமார் சங்ககரா (இலங்கை) - 15, 999 ரன்கள்
- சச்சின் (இந்தியா) - 15, 962 ரன்கள்
- டிராவிட் (இந்தியா) - 15, 853 ரன்கள்
- ஹசிம் ஆம்லா (தென்னாப்பிரிக்கா) - 15, 185 ரன்கள்