ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதிக் கோரி உலகம் முழுவதும் Black Lives Matter என்ற முழக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் குறித்து உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.
சமூக மாற்றத்தால் மட்டுமே நிறவெறி தாக்குதல்களை தடுக்க முடியும்...! - Black Lives Matter
நிறவெறி தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டுமென்றால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் நிறவெறி தாக்குதல்கள் தவறு என்பதை உணர வேண்டும் என வெஸ்ட் இன்டீஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் மைக்கேல் ஹோல்டிங் பேசுகையில், " உலகம் முழுவதும் நிறவெறி தாக்குதல்கள் நடக்கிறது. கிரிக்கெட், கால்பந்து என அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் நிற ரீதியாக தாக்குதல் நடத்தி தான் வருகின்றனர். விளையாட்டில் நிறவெறி தாக்கதல்களை தடுக்க வேண்டுமென்றால், சமூகத்தில் மாற்றம் நிகழ வேண்டும்.
விதிமுறைகள் விதித்து விளையாட்டில் வேண்டுமென்றால் கட்டுப்படுத்தலாம். முழுமையாக தடுக்க வேண்டுமென்றால் சமூகத்தில் வாழும் மக்கள் நிறவெறி தாக்குதல்கள் தவறு என்பதை உணர வேண்டும்" என்றார்.