சிட்னியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் வென்று தொடரைக் கைப்பற்றியது.
இதனிடையே, இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் ஃபிளெமிங்கின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 1994ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஃபிளெமிங் 7,172 ரன்களை எடுத்துள்ளார். மறுமுனையில், 35 வயதான நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் இதுவரை விளையாடிய 99 டெஸ்ட் போட்டிகளில் 19 சதம் உட்பட 7,174 ரன்களைக் குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த நியூசிலாந்து வீரர்கள்
- ராஸ் டெய்லர் - 7,174 ரன்கள்
- ஸ்டீபன் ஃபிளெமிங் - 7,172 ரன்கள்
- பிரண்டன் மெக்கல்லம் - 6,453 ரன்கள்
- கேன் வில்லியம்சன் - 6,379 ரன்கள்
- மார்டின் குரூவ் - 5,444 ரன்கள்
இதையும் படிங்க: நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் எப்படி இருக்கும்: ஒரு பார்வை!