தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

5 நாட்களாக ஆஸி.க்கு தண்ணி காட்டிய இங்கிலாந்து வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்த 10ஆவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ரோரி பர்ன்ஸ் படைத்துள்ளார்.

#Ashes: ஐந்து நாட்களாக ஆஸி.க்கு தண்ணிக்காட்டிய இங்கிலாந்து வீரர்!

By

Published : Aug 6, 2019, 6:23 PM IST

டெஸ்ட் கிரிக்கெட்டில் பழமைவாய்ந்த தொடராக கருதப்படும் ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதில், எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இப்போட்டியில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்திருந்தாலும், அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோரி பர்ன்ஸ் தனது சிறப்பான ஆட்டத்திறன் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 133 ரன்கள் அடித்த இவர், இரண்டாவது இன்னிங்ஸில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

சதம் விளாசிய ரோரி பர்ன்ஸ்

இடதுகை பேட்ஸ்மேனான இவர், விரைவில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் குக்கின் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து என்பது மிகவும் கடினம். ஆனால், இவர் இப்போட்டியில் தனது நிதானமான ஆட்டத்தால் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து மிரட்டியுள்ளார்.

  1. முதல் நாள் - நான்கு ரன்களுடன் களத்தில் இருந்தார்.
  2. இரண்டவாது நாள் - 125 ரன்கள் நாட் அவுட்
  3. மூன்றாவது நாள் - 133 ரன்களில் அவுட்
  4. நான்காவது நாள் - ஏழு ரன்கள் நாட் அவுட்
  5. ஐந்தாவது நாள் - 11 ரன்களில் அவுட்

இதன்மூலம், டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்த 10ஆவது வீரர் மற்றும் நான்காவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இச்சாதனையை முதன்முதலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எல். ஜெய்ஷிம்ஹா 1960இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில்

ஐந்து நாட்களும் பேட்டிங் செய்த வீரர்கள்

  • எம். எல். ஜெய்ஷிம்ஹா (இந்தியா) v ஆஸ்திரேலியா, 1960
  • ஜெஃப் பாய்காட் (இங்கிலாந்து) v ஆஸ்திரேலியா, 1977
  • கிம் ஹியூக்ஸ் (ஆஸ்திரேலியா) v இங்கிலாந்து, 1980
  • ஆலன் லாம்ப் (இங்கிலாந்து) v வெஸ்ட் இண்டீஸ், 1984
  • ரவி சாஸ்திரி (இந்தியா) v இங்கிலாந்து, 1984
  • கிரிஃப்பித் (வெஸ்ட் இண்டீஸ்) v நியூசிலாந்து, 1999
  • பிளிண்டாஃப் (இங்கிலாந்து) v இந்தியா, 2006
  • அல்விரோ பீட்டர்சன் (தென்னாப்பிரிக்கா) v நியூசிலாந்து, 2012,
  • புஜாரா (இந்தியா) v இலங்கை, 2017
  • ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து) v ஆஸ்திரேலியா, 2019

ABOUT THE AUTHOR

...view details