உலக அளவில் பல்வேறு நாடுகள் இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டு குறிப்பிட்ட ஒரு சில நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிரிக்கெட் விளையாட்டுக்கு அளிக்கப்படுவதில்லை. எனினும் அந்த நாடுகளிலும் கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் சில தொடர்கள் நடத்தப்படுகின்றன.
இதுக்கு அஸ்வின் போடுற பந்தே பரவால்ல...ரோமானியா பவுலரின் வைரல் பந்துவீச்சு - பந்துவீச்சு
ரோமானியாவைச் சேர்ந்த பேவல் ஃப்ளோரின் என்ற கிரிக்கெட் வீரர் தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறார்.
அந்த வகையில் ஐரோப்பியன் டி10 லீக் என்ற பத்து ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோமானியாவைச் சேர்ந்த பந்துவீச்சாளர் ஒருவர் பந்துவீசிய முறை தற்போது சமூகவலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. இந்த தொடரில் கிளஜ் கிரிக்கெட் அணிக்காக ஆடும், பேவல் ஃப்ளோரின் ட்ரெக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை குழந்தைக்கு தூக்கி போடுவது போன்று வீசினார்.
முதல் பந்தை வைட்டாக வீசிய அவர் அடுத்தடுத்த பந்துகளையும் அதேபோன்றே வீசினார். எனினும் ஃப்ளோரின் மெதுவாக வீசிய பந்தை பேட்ஸ்மேன் ஒருமுறை கூட சிக்ஸருக்கு விளாசவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சில ரசிகர்கள் இந்த பவுலிங்கை காட்டிலும் இந்திய வீரர் அஸ்வினின் வீசும் பந்தே பராவயில்லை என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் அஸ்வின் டிஎன்பில் தொடரில் இதுபோன்ற குழந்தைத்தனமாக பந்துவீசியது குறிப்பிடத்தக்கது.