உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் மற்றும் ராகுல் நிதானமாக ஆடி ரன் குவித்தனர். ஒரு கட்டத்தில் ரோஹித் அதிரடி காட்டி ஆடியதால் உலகக்கோப்பையில் தனது 4 வது சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங் மற்றும் சங்ககாரா சாதனையை சமன் செய்துள்ளார்.
சச்சினின் சாதனையை சமன் செய்வாரா ரோஹித்! - ரோஹித் சர்மா
பிரிங்ஹாம்: ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடரில் நான்கு சதங்களை அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் இலங்கை வீரர் சங்ககாரா ஒரே உலகக்கோப்பை தொடரில் நான்கு சதங்கள் அடித்த சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.
சதமடித்த ரோஹித் சர்மா
இந்தியாவிற்கு மேலும் ஒரு லீக் போட்டி இருப்பதால் ரோஹித் இன்னும் ஒரு சதம் அடித்தால் சச்சினின் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கு முன் இலங்கை வீரர் சங்ககாரா 2015 ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் நான்கு சதங்கள் அடித்திருந்தார். அந்த சாதனையையும் ரோஹித் சர்மா தற்போது சமன் செய்துள்ளார். இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் ரோஹித் சர்மா பல உலக சாதனை நிகழ்த்த போவதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Last Updated : Jul 2, 2019, 8:10 PM IST