2019ஆம் ஆண்டில் இந்திய அணி பெரும்பாலான ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, உலகக் கோப்பையில் ஐந்து சதங்கள் விளாசிய முதல் வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் தனதாக்கிக் கொண்டார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் சிறந்து விளங்கிய வீரர்களை கெளரவிக்கும் வகையில் ஐசிசி பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, 2019ஆம் ஆண்டின் ஒருநாள் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய வீரர் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 28 ஒருநாள் போட்டிகளில் ஏழு சதம் உட்பட 1,490 ரன்களைக் குவித்து, கடந்த ஆண்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.