ஒரு சிக்சர்... இரண்டு கேட்சுகள் இவைததான் 2007 டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கா அல்லது பாகிஸ்தானுக்கா யாருக்கு என்பதை தீர்மானித்தது.
கிரிக்கெட்டில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணியின் அத்தியாம் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்துதான் தொடங்கியது. சீனியர்கள், பயிற்சியாளர்கள் இல்லாத அணியை வழிநடத்திய தோனி அண்ட் கோவின் திறமையை இந்தத் தொடர் வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று நேற்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இந்திய ரசிகர்கள் நேற்றைய தினத்தை பண்டிகை நாளாகக் கொண்டாடினர்.
158 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங் செய்த பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி நான்கு பந்துகளில் ஆறு ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இந்த பதற்றமான சூழலில் பேட்டிங் செய்த மிஸ்பா, இந்திய வீரர் ஜோகிந்தர் ஷர்மா வீசிய பந்தை ஸ்கூப் ஷாட் ஆட முயற்சித்து ஸ்ரீசாந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால், இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி படைத்ததோடு மட்டுமின்றி தொடர்வெற்றி என்னும் புதிய பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.
பொதுவாக, போட்டிகளில் வீரர்கள் செய்யும் சிறு தவறுதான் அந்த போட்டியின் முடிவை முற்றிலும் மாற்றியமைக்கும். நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலின் ஒரு ஓவர் த்ரோவால் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியின் முடிவு இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறியது. அதேபோலதான், இந்த டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியிலும் பாகிஸ்தான் வீரர் முகமது ஹஃபிஸ் செய்த சிறு தவறால் போட்டியின் முடிவு மட்டுமின்றி வரலாறும் மாறியது.
ரோகித்தின் கேட்சை தவறவிட்ட ஹஃபிஸ் 20ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா லாங் ஆன் திசை நோக்கி பந்தை அடித்தார். அப்போது அங்கு ஃபீல்டிங்க் செய்த முகமது ஹஃபிஸின் கைக்கு நேராக வந்த கேட்சை அவர் தவறவிட்டதால் பந்து சிக்சருக்கு சென்றது. பின் பாகிஸ்தானின் வெற்றிக்கு அந்த ஒரு சிக்சர் தேவைப்பட்ட நிலையில் அந்த அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இன்றுவரை பெரும்பாலானோர் ஸ்ரீசாந்த் அந்த கேட்சை விட்டிருந்தால் போட்டியின் முடிவு பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்திருக்கும் என்றே கருதுகின்றனர். கிரிக்கெட்டில் Every single run counts என்ற ஒரு கூற்றுண்டு. ஒருவேளை ஸ்ரீசாந்துக்கு முன்பு முகமது ஹஃபிஸ் ரோகித்தின் கேட்சை சரியாக பிடித்திருந்தால் இந்தியாவுக்கு ஆறு ரன்கள் கிடைத்திருக்காது. இதனால், மிஸ்பாவிற்கும் கடைசி நேரத்தில் ஸ்கூப் ஷாட் ஆட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.
மிஸ்பா அவுட் ஆன மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் இந்தியாவுக்கு கிடைத்த கோப்பை பாகிஸ்தானுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கும். நல்லவேளை முகமது ஹஃபிஸைப் போல, ஸ்ரீசாந்த் அந்த தவறை செய்யாததால், நாம் இந்திய அணியின் இந்த வெற்றியைக் கொண்டாடிவருகிறோம்.
டி20 உலகக்கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்தியா