தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹிட்மேனால் மட்டுமே டி20 போட்டிகளில் இரட்டைசதம் அடிக்க முடியும் - ஆஸி. வீரர்! - டி20 போட்டிகளில் தனிநபரின் அதிக ஸ்கோர்

டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க இந்திய வீரர் ரோஹித் சர்மாவால் மட்டுமே முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Rohit Sharma only player capable of scoring 200 in T20s: Hogg
Rohit Sharma only player capable of scoring 200 in T20s: Hogg

By

Published : Mar 16, 2020, 8:15 PM IST

தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது எளிதாகிவிட்டது. இதுவரை ஆறு வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருந்தாலும், டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது முயலாத காரியமாக இருக்கிறது.

2018இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், 76 பந்துகளில் 172 ரன்களை விளாசினார். இதுவே சர்வதேச டி20 போட்டிகளில் தனிநபர் அடித்த அதிக ஸ்கோராகும். அதேபோல 2013 ஐபிஎல் போட்டியில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெயில் 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்ததே டி20 போட்டிகளில் தனிநபர் அடித்த அதிக ஸ்கோராக இருக்கிறது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் டி20 போட்டிகளில் யார் முதலில் இரட்டை சதம் அடிப்பார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பிராட் ஹாக், தற்போதைய சூழலில் ரோஹித் சர்மாவால் மட்டுமே டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிக்க முடியும். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் அடிக்கும் திறன் உடையவர்.

அதனால் டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பதற்கான அனைத்துத் தகுதியும் அவரிடம் உள்ளது என பதிலளித்திருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர் 118 ரன்கள்தான். ஒருநாள் போட்டிகளில் மூன்றுமுறை இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த அவர், விரைவில் பிராட் ஹாக் தெரிவித்ததை போல டி20 போட்டிகளிலும் இரட்டை சதம் அடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:33 இன்னிங்ஸ்... 370 நாள்கள்; 100ஆவது சதம் விளாசிய சச்சின் நினைவலைகள்!

ABOUT THE AUTHOR

...view details