தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா வீரர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்களா? ட்விட்டரில் பொங்கும் நெட்டிசன்கள்!

ஆஸ்திரேலியாவில் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள், உணவகத்தில் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை சாப்பிட்டதாக ஹோட்டல் பில்லில் இடம்பெற்றுள்ளதால், ட்விட்டரில் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Rohit Sharma, Indian Players get trolled for eating beef during controversial outing
Rohit Sharma, Indian Players get trolled for eating beef during controversial outing

By

Published : Jan 3, 2021, 4:16 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 6ஆம் தேதி சிட்னியில் நடைபெற்ற உள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் மெல்போர்னில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, சுப்மன் கில், பிரித்வி ஷா ஆகியோர் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்த ரசிகர், இந்திய அணி வீரர்களின் உணவிற்குப் பணம் செலுத்தியதை அடுத்து, ரிஷப் பந்து அந்நபரை கட்டித்தழுவியதாக ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியாகின.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள், ஆஸ்திரேலியாவின் கரோனா பாதுகாப்புச் சூழலை மீறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து ரோஹித் சர்மா உள்பட ஐந்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இருப்பினும் வீரர்கள் மீதான இந்த குற்றச்சாட்டை பிசிசிஐ முற்றிலுமாக மறுத்துள்ளது.

மீண்டும் ஒரு சிக்கல்

இந்நிலையில் தற்போது ஐந்து வீரர்களும் ஒரு புதிய சிக்கலில் சிக்கியுள்ளனர். அது வீரர்கள் சாப்பிட்ட உணவு ரசீதில், அவர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை (Beef and Pork) வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த ஒரு சிலர், இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, வீரர்கள் ஏன் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என மற்றொருபுறம் #beef, #IStandWithRohit என்ற ஹேஸ்டாக்குகள் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க:கரோனா விதிகளை மீறிய வீரர்களைத் தனிமைப்படுத்தியது பிசிசிஐ!

ABOUT THE AUTHOR

...view details