கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் தங்கள் வீடுகளிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் ஸ்மித், வார்னர் இடம்பெறுவதினால், இத்தொடர் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரோகித், ‘இந்தாண்டு தொடக்கத்தில் நான் நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை செய்ய காத்திருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. அதனால், ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இத்தொடரில் ஸ்மித், வார்னர் இருவரும் அணியில் இருப்பார்கள் என்பதால், இது சவால் நிறைந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.