இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. இதுவரை ஒரே ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டுமே பங்கேற்றுள்ள இந்திய அணி முதல்முறையாக அந்நிய மண்ணில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இதனால் இந்தப் போட்டி ரசிகர்களிடைடே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிங்க் பால் டெஸ்ட்... ஸ்டீவ் ஸ்மித், ஜேசன் ராய்: ரோஹித் ஷர்மா சாட்ஸ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கவுள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
rohit-sharma-believes-playing-pink-ball-test-in-australia-will-be-challenging
இதுகுறித்து ரசிகர்களுடன் ரோஹித் ஷர்மா உரையாடும்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டி பெரும் சவாலாக இருக்கப் போகிறது. அந்தத் தொடரில் பங்கேற்பதற்காக ஆவலுடன் உள்ளேன். எனக்கு ஸ்டீவ் ஸ்மித், ஜேசன் ராய் ஆகியோரின் ஆட்டங்களைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும்'' என்றார்.