தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஹர்திக் பாண்டியாவை விட சிறந்த ஆல் ரவுண்டர் ஹிட்மேன்தான்' - ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியல்! - ஹர்திக் பாண்டியாவின் பட்டியல்

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் பந்து வீசி ஏழு ஆண்டுகள் ஆகின்றன.

rohit-ranked-

By

Published : Nov 12, 2019, 4:19 PM IST

சர்வதேச டி20 போட்டியில் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவை விட ரோஹித் சர்மா நல்ல இடத்தைப் பிடித்துள்ளார்.


வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடர் முடிந்ததையடுத்து, ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 48ஆவது இடத்தில் உள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா 58ஆவது இடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் பந்து வீசி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சூழலில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியாவை விட இப்பட்டியலில் நல்ல இடத்தில் உள்ளது ஆச்சரியமளிக்கும் விஷயமாக உள்ளது. இதையெல்லாம் விட சிறப்பம்சம் என்னவென்றால் 2016 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பையில், கடைசியாக பந்து வீசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, இப்பட்டியலில் 22ஆவது இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இதுவரை 40 டி20 போட்டிகளில் விளையாடி 310 ரன்களும், பவுலிங்கில் 38 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற டி20 போட்டியில் கூட ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

இப்படி இருக்க, ஹர்திக் பாண்டியாவை விட கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் எப்படி ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் நல்ல இடத்தை பிடித்தனர் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இதையும் படிங்க:

கிரிக்கெட்டில் இந்தியாதான் பாஸ் - சோயப் அக்தர்

ABOUT THE AUTHOR

...view details