இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 387 ரன்களை எடுத்தது.
இதில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள ரோஹித் சர்மா - கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினர். இந்தப் போட்டியில் இவர்கள் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் முறையில் 227 ரன்களை குவித்திருந்தனர்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச முதல் விக்கெட் பாட்னர்ஷிப் என்ற 17 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளனர். இதற்கு முன்னதாக இந்திய அணியின் அதிரடி மன்னர்கள் சேவாக் - கங்குலி இணை 2002ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் போட்டியில் 196 ரன்களை எடுத்ததே, இதுநாள் வரை சாதனையாக இருந்தது.