தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய அணியின் அடுத்த தோனி யார் ? ரெய்னா பதில் - வலையொளி நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா

டெல்லி: எம்.எஸ். தோனியின் குணநலன்கள் இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிடம் ஏராளமாக உள்ளன என்று இந்திய அணியின் ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

India cricket Allrounder Suresh Raina
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா

By

Published : Jul 29, 2020, 2:02 PM IST

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் ஜெமிமா ரோட்ரிக்யூஸ் மற்றும் தென்னாப்பரிக்கா பேட்ஸ்மேன் ஜேபி டுமினி ஆகியோர் தொகுத்து வழங்கிய வலையொளி-இல் (போட்காஸ்ட்) இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா உரையாடினார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனியாக, தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா உள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ரோஹித் சர்மா மிகவும் அமைதியாக செயல்படுவதை பார்த்துள்ளேன். மற்ற வீரர்கள் கருத்துகளை கவனிப்பதுடன், அவர்களுக்கு தேவையான நேரத்தில் நம்பிக்கையை அளிக்க விரும்புவார். இவற்றுக்கு மேலாக முன்னின்று தலைமை ஏற்க விரும்பும் வீரராக திகழ்கிறார்.

வீரர்களின் உடை மாற்றும் அறையில் அனைவருக்கும் மரியாதை கொடுப்பார். அணியில் விளையாடும் வீரர்கள் எல்லோரையும் கேப்டன் போன்று நினைத்து விளையாடுபவர். அவரது தலைமையில் வங்கதேசத்தில் ஆசிய கோப்பையை வென்றுள்ளோம். அப்போது இளம் வீரர்களான ஷர்துல் தாக்கூர், வாஷங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் எவ்வாறு நம்பிக்கை அளித்தார் என்பதை நேரில் பார்த்துள்ளேன்.

அவருடன் இணைந்து விளையாடும்போது போட்டியின் தீவிரத்தை உணர்ந்து விளையாடலாம். அவரிடம் வெளிப்படும் ஆற்றலானது நேர்மறையான எண்ணங்களை அளிக்கும் விதமாக உள்ளது. எம்.எஸ். தோனிக்கு பிறகு அவரைப் போன்ற புத்திசாலி வீரராக உள்ளார்.

அத்துடன் தோனியை விட அதிக ஐபிஎல் தொடர்களை வென்றவராகவும் திகழ்கிறார். ஒரு அணியின் கேப்டன் வீரர்களை பிரச்னைகள் கேட்டறிந்து அதை சரி செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் வீரர்கள் மனரீதியான பிரச்னைகளிலிருந்து விடுபடுவர். அந்த வகையில் ரோஹித்தை அடுத்த தோனி என்றே கூறுவேன்". இவ்வாறு ரெய்னா தெரிவித்தார்.

இதையும் படிங்க: ப்யூன் வேலைக்கு விண்ணப்பித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

ABOUT THE AUTHOR

...view details