இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரராக வலம் வருபவர் ரோஹித் சர்மா. இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதமடித்து அசத்தியவர். மேலும் இவர் ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணியின் துணைக்கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறர்.
இந்நிலையில் இவர் இன்று ஸ்பெய்ன் நாட்டின் பிரபலமான கால்பந்து தொடரான லாலிகா தொடரின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கால்பந்து வீரர் அல்லாத ஒருவர் லாலிகா தொடரின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.