தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனியைப் பின்னுக்குத் தள்ளவிருக்கும் ரோஹித்...!#INDvBAN - தோனியை பின்னுக்கு தள்ளவிருக்கும் ரோஹித்

டெல்லி: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார்.

Rohit all set to surpass Dhoni

By

Published : Nov 3, 2019, 6:14 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இன்று டெல்லியில் தொடங்கவுள்ள முதலாவது டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ரோஹித் சர்மா சில சாதனைகளை படைக்கவுள்ளார்.

முதல் சாதனையாக அதிக சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைக்கவுள்ளார் ரோஹித். முன்னதாக, இவர் அதிக சர்வதேச டி20 போட்டிகளில்(98) விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையை முன்னாள் கேப்டன் தோனியுடன் பகிர்ந்திருந்தார். இன்று நடைபெறும் போட்டியில் ரோஹித் பங்கேற்றால், இந்திய அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

மேலும் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமான ரோஹித் இன்றைய போட்டியில் களமிறங்கினால், உலகில் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது நபர் என்ற சாதனையை படைப்பார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடியின்(99 போட்டிகள்) சாதனையை சமன் செய்வார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்(111 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார்.

அதேபோல் இந்திய அணிக்காக ரோஹித் இன்றைய போட்டியில் களமிறங்கி எட்டு ரன்கள் எடுத்தால், டி20 போட்டியில் அதிக ரன்களை அடித்த விராட் கோலியின்(2, 450 ரன்கள்) சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: யுவராஜ் சிங்-கா இது...? சிவம் துபேவின் பயிற்சி வீடியோவால் குழம்பிய ரசிகர்கள்..!

ABOUT THE AUTHOR

...view details