ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் சில மாதங்களுக்கு முன்னதாக அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த டக்கி பிரவுனை நீக்கியது. அவர் 2017ஆம் ஆண்டிலிருந்து அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார். திடீரென பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அணியின் இயக்குநரானார் ராபின் சிங்
லண்டன்: ஐக்கிர அரபு அமீரக கிரிக்கெட் அணியின் புதிய இயக்குநராக இந்திய வீரர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஐக்கிய அமீரக அணியின் புதிய இயக்குநராக முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஹாங்காங், அமெரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். ராபின் சிங்கின் வரவு ஐக்கிய அமீரக அணிக்கு புதிய மாற்றத்தைக் கொடுக்கும் என அந்நாட்டு ரசிகர்களால் நம்பப்படுகிறது.
இதையும் படிங்க:சொந்த மண்ணில் கடைசி தொடரில் பங்கேற்கும் பயஸுக்காக அரங்கத்தில் பறந்த விசில்கள்