உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடைபெற்றுவருகின்றன. இதில், இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடுவதால் அவர்களது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்துக்கு வருகை தருகின்றனர். இதுவரை நான்கு போட்டிகள் முடிந்த நிலையில், நாளை மறுநாள் மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.