தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’இவர மட்டும் ஏன் நீங்க டீம்ல சேத்துக்க மாட்டுகிறீங்க’ கொதித்தெழுந்த ஆர்ஜே பாலாஜி! - இந்திய கிரிக்கெட் அணியின் வீரருமான அபினவ் முகுந்த்

திரைப்பட நடிகரும், வானொலி வர்ணைனையாளருமான ஆர்ஜே பாலாஜி, இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்துக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கபடுவதில்லை என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

RJ Balaji supports Abinav Mukund

By

Published : Nov 2, 2019, 9:38 PM IST

Updated : Nov 2, 2019, 9:48 PM IST

வானொலியில் வர்ணைனையாளராக இருந்து தமிழ் திரையுலகில் கால்பதித்தவர் ஆர்ஜே பாலாஜி. இவர் சமீப காலமாக பிரபல விளையாட்டு தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில பாலாஜியின் நண்பரும், இந்திய கிரிக்கெட் அணியின் வீரருமான அபினவ் முகுந்த் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அவரின் அந்த பதிவில், ஒவ்வொரு முறையும் ஐபிஎல்-லில் விளையாடிய வீரர் ஐம்பது, நூறு ரன்களை அடித்தால், மக்கள் அவர்களை இந்திய அணியில் ஆட விரும்புகிறார்கள். ஆனால் ஐபிஎல்-லை தவிர்த்து மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மக்கள் கொண்டாட விரும்புவதில்லை.

இதில் குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் தமிழக வீரரான அபினவ் முகுந்த் மூன்று முறை 500+ ரன்கள் எடுத்தவர். அதுமட்டுமல்லாமல் இந்த சீசனுக்கான விஜய் ஹசாரே தொடரின் இரண்டாவது அதிக ரன் அடித்த சிறப்பையும் பெற்றுள்ளார். மேலும் அவர் இந்த சிசனுக்கான தொடரில் 52+ சராசரியுடன், 600ரன்களை எடுத்துள்ளார். இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அபினவ் முகுந்திற்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு வழங்க யோசிக்கிறீர்கள், எனப்பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவின் இணைப்பில் இந்திய அணி மற்றொரு வீரரான சஞ்சு சாம்சன், அபினவ் முகுந்த் ஆகியோரை ஒப்பிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். இவரின் இந்த ட்விட்டர் பதிவானது தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் அணிக்கு கேப்டனான தினேஷ் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Last Updated : Nov 2, 2019, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details