லண்டன்:"ரிஷப் பந்த் இல்லாத இந்திய அணியை இனி, என்னால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது" என்று முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மேன் இயான் பெல் கூறியுள்ளார். மேலும், நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்று தொடரிலும் ரிஷப் பந்த் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
" ரிஷப் பந்த் இந்திய அணியின் எதிர்காலமாகத் திகழ்கிறார். அவர் இல்லாமல் ஒரு இந்திய அணியை இப்போது என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.
இது ஒரு அரிய திறமை என்று நான் நினைக்கிறேன். பந்த் தனது தொடக்க காலத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்பது அனைவருக்கும் அமையாதது" என்று பெல் மேலும் கூறினார்.
நேற்று நடைபெற்ற தொடரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதில் ரிஷப் பந்த் 62 பந்துகளில் 78 ரன்கள் எடுத்திருந்தது இந்திய அணிக்கு வலுசேர்த்தது.