தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய ரிஷப் பந்த்!

இந்திய வீரரான ரிஷப் பந்த், தோனியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Rishab pant and Dhoni
Rishabh Pant enjoys Christmas outing with MS Dhoni and friends

By

Published : Dec 26, 2019, 8:59 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பின் எந்த ஒரு போட்டியிலும் விளையாடாமல் உள்ளார். இதனால், அவரது ஓய்வுக் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்துவந்த நிலையில், இது குறித்து தன்னிடம் அடுத்த ஆண்டு ஜனவரி வரை கேட்க வேண்டாம் என தோனி தெரிவித்திருந்தார்.

அதேசமயம், தோனிக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுவருகிறது. சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் ஒரு அரைசதம் உட்பட 117 ரன்கள் எடுத்து தன்மீது வைக்கப்பட்ட விமர்சினத்திற்கு முற்றிப்புள்ளி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பங்கேற்கும் இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று தோனியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய பந்த், அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் புகைபடம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:தோனியின் 2ஆம் தாய் வீட்டில் ரிஷப் பந்திற்கு கிடைத்த கரகோஷம்!

ABOUT THE AUTHOR

...view details