தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2021: டெல்லி அணியின் புதிய கேப்டன் ரிஷப் பந்த் - ரிஷப் பந்த்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீரர் ரிஷப் பந்த் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Rishabh Pant appointed captain of Delhi Capitals
Rishabh Pant appointed captain of Delhi Capitals

By

Published : Mar 30, 2021, 9:23 PM IST

டெல்லி:கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாகச் செயல்பட்டுவந்தார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோள்பட்டை காயம் காரணமாக தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் புதிய கேப்டனாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் நிலவிவந்த நிலையில், அணி நிர்வாகம் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்தை புதிய கேப்டனாக அறிவித்து தனது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் ட்வீட்

ஸ்டீவ் ஸ்மித், தவான், ரஹானே, அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் இருந்தாலும் ரிஷப் பந்திற்கு கேப்டன் பொறுப்பை வழங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

இதையும் படிங்க:'இந்தியாவின் எதிர்காலம் ரிஷப் பந்த்' : இயான் பெல் புகழாரம்

ABOUT THE AUTHOR

...view details