பாரம்பரியமாக ஐந்து நாள்களாக நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியினை நான்கு நாள்களாகக் குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, 2023ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பரிசோதனை முயற்சி செய்ய திட்டமிடப்பட்டது.
இதற்கு முன்னாள் வீரர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்புக்கு வலுசேர்க்கும் விதமாக ரிக்கி பாண்டிங் தனது கருத்தைக் கூறியுள்ளார். அதில், கடந்த இரு வருடங்களாக அதிகமான டெஸ்ட் போட்டிகள், நான்கு நாள்களில் முடிவடைந்துள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் டிராவில் முடிந்துள்ளன என்பதையும் கவனித்துள்ளேன். ஆனால் இவையனைத்தும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளாக நடைபெற்றால் அதிகமான போட்டிகள் டிராவில்தான் முடிவடையும். அதனை நான் உட்பட யாரும் பார்க்க விரும்பமாட்டார்கள்.