2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய வீரர்களைக் கொண்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் தங்கள் அணிகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த விளையாட்டில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங்கும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ' எல்லோரும் இந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த வீரர்களைக் கொண்டு அணிகளை அறிவித்து வருகின்றனர். அதில் நானும் இணைந்து கொள்கிறேன். இதோ இதுதான் எனது அணி என 11 வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளார்.
அந்தப் பட்டியலில் விராட் கோலி கேப்டனாகவும், இலங்கை வீரர் சங்ககரா விக்கெட் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நான்கு இங்கிலாந்து வீரர்களும், மூன்று ஆஸ்திரேலிய வீரர்களும், தென் ஆப்பிரிக்க வீரர்களில் டேல் ஸ்டெயினும், நியூசிலாந்து கேப்டன் வில்லியசனும் இடம்பெற்றுள்ளனர். இதில் 12ஆவது வீரராக தென் ஆப்பிரிக்க அணியின் டி வில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார்.
அணி விவரம்: டேவிர் வார்னர், அலெஸ்டர் குக், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி (கேப்டன்), குமார் சங்ககரா (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், டேல் ஸ்டெயின், நாதன் லயன், ஸ்டூவர்ட் பிராடு, ஜேம்ஸ் ஆண்டர்சன், டி வில்லியர்ஸ் (12ஆவது வீரர்).
இதையும் படிங்க: இந்த தசாப்தத்தில் விடைபெற்ற 90'ஸ் கிட்ஸ்களின் கிரிக்கெட் ஹீரோக்கள்! #10YearsofCricket