சர்வேதச கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டன்களின் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங். இவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. இவரது கேப்டன்ஷிப்பில் ஆஸ்திரேலிய அணி 324 போட்டிகளில் 220இல் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தான் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டி குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார். அந்தப் பதவில், "நான் கேப்டனாக இருந்த முதல் டெஸ்ட் போட்டியில் அணி வீரர்கள் எனது ஜெர்சியில் கையெழுத்திட்டு, என்னை பற்றி குறிப்புகளையும் எழுதினர். மேலும் கடினமான சூழ்நிலையில், டேமியன் மார்டின், டேரன் லீமேன் ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் இப்போட்டியை என்றும் நினைவில் அதிகமாக வைத்திருப்பேன்" என பதிவிட்டிருந்தார்.