தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தோனியின் வெற்றிக்கான ரகசியத்தை உடைத்தெரிந்த டூ பிளேசிஸ்! - ஐபிஎல் 2020

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் சிறப்பான வெற்றிக்கு மகேந்திர சிங் தோனியின் புத்திசாலித்தனமான ஆட்சேர்ப்புக் கொள்கையும், சர்வதேச கேப்டன்களை சரியாக பயன்படுத்தியதுமே காரணம் என தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளேசிஸ் கூறியுள்ளார்.

Recruiting International skippers who are thinking cricketers: Faf reveals secret of Dhoni's IPL success
Recruiting International skippers who are thinking cricketers: Faf reveals secret of Dhoni's IPL success

By

Published : Apr 20, 2020, 10:56 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இம்மாதம் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கும் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், ஊரடங்கினால் வீட்டில் நேரத்தை செலவிடும் வீரர்களுடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்திவருகிறது. இதில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் கலந்துகொண்டு சென்னை அணியின் வெற்றிக்கான ரகசியமே தோனி என்று தெரிவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி

இது குறித்து டூ பிளேசிஸ் கூறுகையில், ஐபிஎல் தொடரின் அனைத்து சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்படுவதற்கு மிக முக்கிய காரணம் தோனி மற்றும் ஃப்ளமிங் மட்டும்தான். ஏனெனில் இவர்களின் அணி தேர்வே சர்வதேச கேப்டன்களை முன்னோக்கி இருக்கும். உதாரணம் பிராண்டன் மெக்குலம், பிராவோ, ரெய்னா என கேப்டன்களை கொண்டு ஓவ்வொரு சீசனிலும் அணியை கட்டமைத்தனர்.

எனவே அணியில் அதிகமான கேப்டன்கள் இருந்ததால், அவர்களுக்கு கிரிக்கெட் குறித்து உணர்த்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் தான் சென்னை அணி அனைத்து சீசனிலும் சிறப்பு வாய்ந்த அணியாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவில் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் ஐபிஎல் டி20 தொடரில், இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் அரையிறுதிப் போட்டிகளுக்கு சென்றுள்ளது.

இதையும் படிங்க:கடை நிலை டென்னிஸ் வீரர்களுக்கு உதவும் உலகின் முன்னணி வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details