தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

என்ன செய்தாவது டி20 உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா வெல்லவேண்டும்... ஜான்டி ரோட்ஸ்! - De Villiers

இந்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி நிச்சயம் வெல்ல வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

recalling-abd-for-t20-wc-interesting-but-tough-call-rhodes
recalling-abd-for-t20-wc-interesting-but-tough-call-rhodes

By

Published : Mar 10, 2020, 7:47 PM IST

உலகக் கோப்பைத் தொடரில் பெரும் தோல்வி, டூ ப்ளஸிஸ் கேப்டன்சியிலிருந்து நீக்கம், புதிய கேப்டன் டி காக் செயல்பாடுகள் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் டிரான்சிஷனில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி கன்சிஸ்டண்டாக ஆடுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே ஐபிஎல் தொடருக்கு பின்பு டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் பேசுகையில், '' டி வில்லியர்ஸ் அணிக்கு மீண்டும் வருவது சுவாரஸ்யமான முடிவு என்றாலும், கொஞ்சம் கடினமான முடிவும்கூட.

ஏனென்றால் டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்பினால் இளம் வீரர் ஒருவரின் இடம் பறிபோகும். டி வில்லியர்ஸ் எப்போதும் ஸ்பெஷலான் வீரர். பிக் பாஷ் தொடரில் மிகவும் சிறப்பாக ஆடினார். ஆனால் டி20 உலகக்கோப்பைத் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்றால் நிச்சயம் ஏதாவது செய்தாக வேண்டும்.

டி வில்லியர்ஸை மீண்டும் அணியில் சேர்ப்பதால் எந்த விதிகளையும் மீறவில்லை. டி வில்லியர்ஸை சேர்ப்பதா, வேண்டாமா? என்பதைத் தேர்வுக் குழுவினர்தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் டி வில்லியர்ஸ் டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆடினால் தென் ஆப்பிரிக்க அணி பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன'' என்றார்.

இதையும் படிங்க:இந்திய அணிக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக வராதது ஏன்? காரணம் கூறிய ஜான்டி!

ABOUT THE AUTHOR

...view details