விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் சமகாலத்தில் தவிர்க்க முடியாத வீரர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன், சேஸிங்கின்போது சச்சின் டெண்டுல்கருக்கு பதிலாக விராட் கோலியை தேர்வு செய்வேன் என பேசினார்.
கோலி, ரோஹித்: ஒருவரைத் தேர்வு செய்த முன்னாள் ஆஸி. வீரர்! - can't compare Kohli & Rohit
விராட் கோலி, விராட் கோலி ஆகியோரில் யார் சிறந்த வீரர் என்ற கேள்விக்கு முன்னாள் ஆஸி. வீரர் பிராட் ஹாக் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்-யிடம், விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரில் யார் சிறந்தவர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஹாக், ''இந்திய அணியின் சேஸிங்கின்போது விராட் கோலி தொடர்ந்து சிறப்பாக ரன்கள் குவித்து வந்துள்ளார். கன்சிஸ்டெண்ட்டாக ரன்கள் சேர்த்துள்ளார். அதனால் நான் விராட் கோலியையே தேர்வு செய்வேன். ஆனால் விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரை ஒப்பிடக் கூடாது. ரோஹித் ஷர்மா அதிரடியாக ஆடவேண்டும் என்ற நிலையில் தான் களமிறங்குகிறார்'' என்றார்.