கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று சாதனைப் படைத்தது. அப்போதைய ஆஸ்திரேலிய அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோர் இல்லாததால், இந்திய அணி எளிதாக கோப்பையைக் கைப்பற்றியது என விமர்சனங்கள் வந்தன.
இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருடன் லபுசானேவும் அணிக்கு திரும்பிய நிலையில், ஆஸ்திரேலிய அணி பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்க அச்சம் கொண்டுள்ளது என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இந்திய கேப்டன் விராட் கோலி வம்புக்கு இழுத்ததோடு, சவாலும் விடுத்திருந்தார்.
தற்போது இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதுகுறித்து விராட் கோலி செய்தியாளர்களிடம் பேசுகையில், '' வங்கதேச அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கடந்த ஆண்டு விளையாடினோம். தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டிகள் தொடரின் முக்கிய அம்சமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவ்வகையானப் போட்டிகளை ஆட எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.