தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சொந்த நாடு திரும்பிய மைக் ஹெசன்...!

வெலிங்டன்: 13ஆவது ஐபிஎல் தொடருக்காக இந்தியா வந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆர்சிபி அணியின் இயக்குநருமான மைக் ஹெசன் ஊரடங்கை தொடர்ந்து ஒருமாதத்திற்கு பின் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

rcbs-mike-hesson-finally-returns-to-new-zealand-conveys-special-thanks-to-pm-modi
rcbs-mike-hesson-finally-returns-to-new-zealand-conveys-special-thanks-to-pm-modi

By

Published : Apr 28, 2020, 1:07 PM IST

கரோனா வைரஸ் காரணமாக 13ஆவது ஐபிஎல் சீசன் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும், ஆர்சிபி அணியின் இயக்குநருமான மைக் ஹெசன் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இணைவதற்காக இந்தியா வந்திருந்தார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், விமான போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் மைக் ஹெசன் மீண்டும் சொந்த நாடு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்திலிருந்து நியூசிலாந்து விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பதிவிடப்பட்ட ட்வீட்டில், ''ஒரு நாள் முழுக்க பேருந்தில் பயணம் செய்து மும்பை விமான நிலையத்தை அடைந்தேன். அங்கிருந்து நியூசிலாந்து வந்து சேர்ந்தேன். இதற்கு உதவிய இந்திய பிரதமர் மோடி, நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டர்ன், நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு நன்றி'' எனப் பதிவிட்டுள்ளார்.

மைக் ஹெசன் நியூசிலாந்து திரும்பியதையடுத்து, அவர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முன்னாள் விக்கெட் கீப்பரை கவுரவிக்கும் நியூசிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details