ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது மும்பை அணி.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே கோலியை பறிகொடுத்த பெங்களூரு அணிக்கு டி வில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் கைகொடுத்தது. மோயின் அலியும் தன் பங்குக்கு 50 ரன்களை 32 பந்துகளில் அடித்தார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தபோது டி வில்லியர்ஸ் 51 பந்துகளில் 75 ரன் குவித்திருந்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெங்களூரு அணி 171 ரன்கள் குவித்தது.
மும்பை அணியின் மலிங்கா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிறப்பாக பந்து வீசிய பும்ராவும் நான்கு ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து, தற்போது களமிறங்கியுள்ள மும்பை அணி பேட்டிங் ஆடிவருகிறது. 1.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.