தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கொரோனா பீதி: பயிற்சியை ஒத்திவைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு! - ஐபிஎல் 2020

கொரோனா வைரஸ் காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்களின் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RCB defers training camp amid coronavirus outbreak
RCB defers training camp amid coronavirus outbreak

By

Published : Mar 17, 2020, 8:23 AM IST

உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்றால் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.

இந்தியாவில் இதுவரை கோவிட்-19 வைரஸ் 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா அல்லது ரத்தாகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையே ஐபிஎல் தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்களின் பயிற்சி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்கவிருந்தது. இந்நிலையில், கோவிட்-19 வைரசால் ஆர்.சி.பி. வீரர்களின் பயிற்சி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதாரத் துறை அறிவுறுத்தியபடி மக்கள் அனைவரும் சுத்தமாக இருக்குமாறும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, கோவிட் -19 வைரஸ் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனா வைரஸை வைத்து விளையாட வேண்டாம்' - சின்ன தல ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details