13ஆவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று(செப்.19) தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஷேக் சயீத் மைதானத்தில் மோதின.
முதலில் ‘டாஸ்’ வென்ற சிஎஸ்கே கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவும், குவிண்டன் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
‘டாஸ்’ வென்ற சிஎஸ்கே கேப்டன் டோனி ரோஹித் சர்மா 10 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து டி காக் 20 பந்துகளுக்கு 5 பவுண்டரிகள் என 33 ரன்களுடன் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 17 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் சவுரப் திவாரியும், ஹர்திக் பாண்டியாவும் ஆட்டத்தை சூடு பிடிக்க வைத்தனர். ஜடேஜாவின் பந்து வீச்சில் பாண்டியா இரண்டு சிக்சர்களை பறக்ககவிட்டார்.
ஆனால் மற்றொரு ஓவரில் சிக்சருக்கு முயற்சித்து விக்கெட்டை இழந்தார். அதேபோல சவுரப் திவாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கிடையில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து அணிக்கு வலுசேர்த்தார்.
அதன்பின் களமிறங்கிய பொல்லார்ட் 18 ரன்களிலும், குருணல் பாண்டியா 3 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இப்படி 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் 163 ரன்கள் இலக்காகக் கொண்டு களம் இறங்கிய சென்னை அணி ஆரம்ப அதிர்ச்சியை அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்சன் 4 ரன்களிலும், முரளி விஜய் 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து அம்பத்தி ராயுடுவும், டு ப்ளெஸ்சிஸும் ஜோடி சேர்ந்தனர். அம்பத்தி ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களையும், டு ப்ளெஸ்சிஸ் 44 பந்துகளில் 58 ரன்களையும் குவித்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.
இதற்கிடையில் ஜடேஜா 10 ரன்களும், சாம் கர்ரன் 18 ரன்களும் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட நிலையில் முதல் 2 பந்தையும் பவுண்டரிக்கு அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
7ஆவது ஆட்டக்காரராக போட்டியில் களமிறங்கிய தோனி இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க:ஒருவரின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!