தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து ஜடேஜா விலகல்? - சென்னை டெஸ்ட்

காயம் காரணமாக சிகிச்சைப் பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து முற்றிலும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ravindra Jadeja unavailable for selection for last two Test vs England: Report
Ravindra Jadeja unavailable for selection for last two Test vs England: Report

By

Published : Feb 10, 2021, 11:06 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியிருந்த இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது ரவீந்திர ஜடேஜா காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். பின்னர் அவரது காயம் தீவிரமடைந்ததையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முன்னேறிய ரூட், பின்னடைவைச் சந்தித்த கோலி

ABOUT THE AUTHOR

...view details