இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியடைந்து டெஸ்ட் தொடரில் சமநிலையில் உள்ளன.
இதனால் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவருகிறது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த ரவீந்திர ஜடேஜா, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். இத்தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விலகியுள்ள நிலையில், ஜடேஜாவும் விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்