தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஷ்வின், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இவர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, தனது சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். அதன்பின், ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இரண்டாண்டு தடையிலிருந்த சென்னை அணி, 2018 ஆம் ஆண்டு மீண்டும் ரீ என்ட்ரி தந்தது.
அப்போது, அஸ்வினை சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் அணி அவரை 7.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது மட்டுமில்லாமல், அவரை கேப்டனாகவும் நியமித்தது. இதைத்தொடர்ந்து, அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 2018இல் ஏழாவது இடத்தையும், 2019இல் ஆறாவது இடத்தையும் மட்டுமே பிடித்தது. இதனால், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டுவிட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரரை தேர்வு செய்ய அந்த அணி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.