இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே இத்தொடரில் நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகிவருகின்றனர்.
இதற்கிடையில் ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொடரின்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 176 ரன்களையும், 24 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதால் பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார்.