தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரஷித் கான்  5 விக்கெட்; முதல் டெஸ்ட் வெற்றியை நோக்கி ஆப்கானிஸ்தான்! - அயர்லாந்து

டேராடூன்: அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற 118 ரன்கள் தேவைப்படுகிறது.

ரஷித் கான்

By

Published : Mar 17, 2019, 8:13 PM IST

அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடர் டேராடூனில் நடைபெற்று வருகிறது.

இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு சுருண்டது. இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 312 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ரஹ்மட் ஷா 98, அஸ்கர் ஆப்கன் 67 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் 140 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணி ரஷித் கானின் துல்லியமான பந்துவீச்சினால் 288 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அயர்லாந்து அணி சார்பில் ஆன்ட்ருவ் பல்பிர்னி 82, கெவின் ஓ பிரேய்ன் 56 ரன்களை அடித்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ரஷித் கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் ஐந்து விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆப்கானிஸ்தான் அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 29 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

இஷாநுல்லாஹ் ஜனத் 16 ரன்களுடனும், ரஹ்மத் ஷா 11 ரன்களுடன்ம் களத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற இரண்டு நாட்களில் இன்னும் 118ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியை எளிதாக பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ABOUT THE AUTHOR

...view details