தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்! - டெல்லி vs பஞ்சாப்

மொகாலி: டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில், பஞ்சாப் அணி வீரர் சுப்மன் கில் நடுவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ranji-trophy-shubman-gill-argues-with-umpire-after-being-given-out
ranji-trophy-shubman-gill-argues-with-umpire-after-being-given-out

By

Published : Jan 3, 2020, 6:04 PM IST

2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் மொகாலியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் மன்தீப் சிங் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து தொடக்க வீரர்களாக சன்வீர் சிங் - சுப்மன் கில் இணை களமிறங்கியது. சன்வீர் சிங் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, பின்னர் வந்த குர்கீரத் சிங்குடன் இணைந்து கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

13ஆவது ஓவரை வீசிய சிமர்ஜித் சிங் பந்தில் கில் 23 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க, நடுவர் அவுட் என அறிவித்தார். ஆனால் கில் எதிர்ப்பு தெரிவித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒருமையில் பேசினார்.

சுப்மன் கில்

அதனோடு சேர்த்து மைதானத்தை விட்டு வெளியேறவும் மறுத்தார். இதனால் ஆட்டம் 10 நிமிடங்கள் தடைபட, மூன்றாம் நடுவர் மைதானத்திற்கு வந்து சமரசம் ஏற்படுத்தினார். இளம் வீரர் கில் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பஞ்சாப் அணி குர்கீரத் சிங் மான், மன்தீப் சிங் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: கில் , மயங்க் அசத்தல் சதம்; தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா ஏ!

ABOUT THE AUTHOR

...view details