தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முச்சதம் அடித்த சர்ஃபராஸ் கான்... டிராவில் முடிந்த மும்பை - உபி ஆட்டம் - முச்சதம் அடித்த சர்ஃபராஸ் கான்

மும்பை: ரஞ்சி டிராபி தொடரில் மும்பை - உத்தரப் பிரதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

ranji-trophy-sarfaraz-becomes-1st-mumbai-batsman-to-smash-triple-ton-after-rohit
ranji-trophy-sarfaraz-becomes-1st-mumbai-batsman-to-smash-triple-ton-after-rohit

By

Published : Jan 23, 2020, 2:19 PM IST

2019-20ஆம் ஆண்டுகளுக்கான ரஞ்சி டிராபி சீசன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் பிரிவு போட்டிகளில் மும்பை - உத்தரப் பிரதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய உத்தரப் பிரதேசம் அக்‌ஷ்தீப் நாத், உபேந்திர யாதவ் ஆகியோரின் சிறப்பாக ஆட்டத்தால் 8 விக்கெட்டுகளை இழந்து 625 ரன்களைக் குவித்தது.

இதையடுத்து பேட்டிங் ஆடிய மும்பை அணி 128 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திலிருந்த சித்தேஷ் லேட் - சர்ஃபராஸ் கான் இணை சிறப்பாக ஆடியது. இந்த இணை ஐந்தாவது விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தது. இதனால் மும்பை அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பித்தது.

சித்தேஷ் லேட் 98 ரன்களில் ஆட்டமிழக்க, சர்ஃபராஸ் கான் - கேப்டன் ஆதித்யா தாரேவுடன் சேர்ந்து அசத்தினார். கேப்டன் தரே 97 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் தனியாளாக களத்திலிருந்த சர்ஃபராஸ், முச்சதம் விளாசினார். இறுதியாக மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 688 ரன்கள் எடுத்தது. இந்தப் போடி டிராவில் முடிந்ததால், இரு அணிகளும் தலா 3 புள்ளிகளைப் பிரித்துக்கொண்டன.

சர்ஃபராஸ் கான்

மும்பை அணிக்காக ரோஹித் சர்மா அடித்த முச்சதத்திற்குப் பிறகு, சர்ஃபராஸ் கான் முச்சதம் விளாசியுள்ளார். இச்சதம் ரஞ்சி டிராபி தொடரில் அடிக்கப்பட்ட மூன்றாவது முச்சதமாகும். அதேபோல் 6ஆவது இடத்தில் களமிறங்கி முச்சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இதுகுறித்து சர்ஃபராஸ் கான் பேசுகையில், ''கடந்த மூன்று சீசன்களாக உத்தரப் பிரதேச அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்றேன். இந்தத் தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கியுள்ளேன். இந்தப் போட்டியில் முச்சதம் விளாசியது நல்ல உணர்வைக் கொடுக்கிறது. நான் 250 ரன்கள் அடித்திருந்தபோது டிக்ளேர் செய்யவேண்டும் என நினைத்தேன். ஆனால் அணி நிர்வாகம் எனக்கு துணை நின்றது. என்னுடைய தந்தை புனேவில் இருந்து எனது ஆட்டத்தைப் பார்ப்பதற்காக மும்பை வந்தார். அவர் முன் முச்சதம் விளாசியது பெருமையாக உள்ளது” என்றார்.

சர்ஃபராஸ் கான் இன்னிங்ஸ் பற்றி மும்பை கேப்டன் ஆதித்யா தாரே பேசுகையில், ''சர்ஃபராஸ் கான் திறமையான வீரர். ஒரு கிரிக்கெட்டராக தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டே வந்துள்ளார். 5 அல்லது 6ஆம் இடங்களில் களமிறங்கி அவரால், ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லமுடியும் என நினைக்கிறேன்'' என்றார்.

சர்ஃபராஸ் கான்

சர்ஃபராஸ் கான் இந்தப் போட்டியில் 391 பந்துகளை எதிர்கொண்டு 301 ரன்கள் எடுத்தார். அதில் 30 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும்.

இதையும் படிங்க: பவுலிங்கில் மிரட்டிய பீட்டர் சிடில்... அடிலெய்ட் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details