தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ரஞ்சி டிராபி போட்டியில் நடுவருக்கு ஏற்பட்ட காயம்! - எதனால் தெரியுமா?

ராஜ்கோட்: செளராஷ்டிரா - பெங்கால் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் கள நடுவர் ஷம்ஷுதீனுக்கு அடிவயிற்றில் காயம் ஏற்பட்டது.

ranji-final-umpire-ruled-out-after-getting-hit-on-abdomen
ranji-final-umpire-ruled-out-after-getting-hit-on-abdomen

By

Published : Mar 10, 2020, 4:50 PM IST

2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் செளராஷ்டிரா - பெங்கால் அணி ஆடிவருகின்றன. இப்போட்டிக்கு கள நடுவர்களாக பத்மநாபன், ஷம்ஷுதீன் ஆகியோர் செயல்பட்டனர்.

அப்போது முதல்நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் எதிர்பாராவிதமாக நடுவர் ஷம்ஷுதீனின் அடி வயிற்றில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதனால் ஷன்ஷூதீன் களத்திலிருந்து வெளியேறினார். முதல் செஷனின் சில மணி நேரம் பத்மநாபன் மட்டுமே நடுவராக செயல்பட்டு வந்தார்.

பின்னர் இரண்டாம் செஷனிலிருந்து டிவி நடுவர் ரவி கள நடுவராகச் செயல்பட, ஷம்ஷூதீன் டிவி நடுவராகச் செயல்பட்டார். முதல்நாள் ஆட்ட நேரம் முடிவடைந்த நிலையில் ஷம்ஷுதீனை மருத்துவர்கள் பரிசோதித்து, ஒருவாரம் வரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனால் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷம்ஷுதீன் பங்கேற்கவில்லை. இவருக்குப் பதிலாக யஷ்வந்த் பார்டே மாற்று நடுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:கொரோனா வைரஸால் தள்ளிபோகிறதா ஐபிஎல்? - பிசிசிஐ பதில்

ABOUT THE AUTHOR

...view details