தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

புதிய பயிற்சியாளரை நியமித்தது 'ராஜஸ்தான் ராயல்ஸ்' - வீரர்கள மற்றும் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்து வருகின்றன

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Australia all-rounder Andrew McDonald

By

Published : Oct 24, 2019, 3:18 PM IST

இந்தியாவில் 2008 முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களைத் தேர்வு செய்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ மெக்டொனால்டை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. 38 வயதாகும் மெக்டொனால்ட் கடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி டெர்டெவில்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.

இதற்கான அறிவிப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன் படி மூன்று ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

இதையும் படிங்க:#VijayHazare: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கர்நாடகா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details