தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமும்...! ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஃப்ரா ஆர்ச்சர்

ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, ஸ்மித், ஸ்டோக்ஸ், மில்லர், பட்லர் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் அடுத்த கோப்பையைக் வென்றெடுக்க காத்திருக்கின்றனர்.

Rajasthan Royals look for turnaround in search for 2nd IPL trophy
Rajasthan Royals look for turnaround in search for 2nd IPL trophy

By

Published : Sep 17, 2020, 8:32 PM IST

ஐபிஎல் தொடரின் முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற புகழுக்கு சொந்தமான அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற 11 சீசன்களில் ஒரு முறை கூட இறுதிப் போட்டியை எட்டும் வாய்ப்பானது அந்த அணிக்கு கிட்டவில்லை.

டிராவிட், கிராம் ஸ்மித், ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, யூசஃப் பதான், டேமியன் மார்ட்டின், ராஸ் டெய்லர், பட்லர், ஸ்டோக்ஸ், ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் போன்ற பலம் வாய்ந்த பேட்ஸ்மேன் பட்டாளம், வார்னே, ஆர்ச்சர், ஸ்ரீசாந்த், டைட் என மிரளவைக்கும் பந்துவீச்சாளர்கள் என ஒவ்வொரு சீசனிலும் போட்டி போட்டு வீரர்களை வாங்கிய ராஜஸ்தான் அணிக்கு, அதில் எதுவுமே பலனை தரவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ்

மாறாக ஐபிஎல் சூதாட்டப் புகாரில் அந்த அணியின் வீரர்கள் சிக்கி, இரண்டாண்டு தடையை பெற்றது தான் மிச்சம். தடைக்காலம் முடிந்து மீண்டும் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, தனது ஜெர்சியை மாற்றியது போல், அணியிலும் பல மாற்றங்களை செய்தது.

அதிலும் குறிப்பாக மற்ற அணியினர் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை சார்ந்திருக்க ராஜஸ்தான் அணி மட்டும் இங்கிலாந்து வீரர்களை மையமாக வைத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர் என ஒரு குட்டி உலகக்கோப்பை சாம்பியன்களை தங்களிடன் வைத்திருந்தது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் - ஜோஸ் பட்லர்

இருந்த போதிலும், கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 13 பேட்டிகளில் ஒன்பதில் தோல்வியைத் தழுவி, ஏழாவது இடத்தையே பிடித்தது. என்னதான் அதிரடி வீரர்களை அணியில் வைத்திருந்தாலும் அதற்கேற்ற கேப்டனோ அல்லது பந்துவீச்சாளர்களோ அணியில் இல்லை என்பதே, ராஜஸ்தான் அணியின் தோல்விகளுக்கு காரணம்.

அதனால் தான் என்னவோ கடந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் அணியின் கேப்டனாக இருந்த அஜிங்கியா ரஹானேவை வெளியேற்றி, ஆண்ட்ரூ டை, ராபின் உத்தப்பா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், மில்லர், கர்ரன் போன்ற வீரர்களை இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக வாங்கியுள்ளது. அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாகவும் நியமித்து, அணியின் பலத்தை பரிசோதிக்க காத்திருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ் - ஸ்டீவ் ஸ்மித்

இப்படி ஒருபுறம் அனைத்தும் சரியாக அமைய, நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்ற சந்தேகத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தற்சமையம் தள்ளப்பட்டுள்ளது. மேலும், தற்போது நடந்து முடிந்த இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர் முடிந்து வீரர்கள் செப்.17ஆம் தேதி தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லவுள்ளனர். அங்கு அவர்கள் ஆறு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பின்ரே, அணியில் இணைய அனுமதிக்கப்படுவர்.

இதற்கிடையில் ராஜஸ்தான் அணியின் முதல் போட்டியே செப்.22ஆம் தேதி சிஎஸ்கே அணியுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இல்லாமல், தொடரின் முதல் போட்டியில் களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு ராஜஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது.

சஞ்சு சாம்சன்

மேலும் முதல் போட்டியில் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற பிரச்னையும் எழுந்துள்ளது. ஏனேனில் உத்தப்பா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர் ஆகியோரில் ஒருவர் அந்த வாய்ப்பை பெறுவர். ஆனால் இதில் கேப்டனாக யருக்கும் அவ்வளவு அனுபவம் இல்லை. தொடரின் முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைத்து பிரச்னைகளையும் சமாளித்து, புதிய அத்தியாயத்தை தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம்:

பட்லர், மில்லர், ஸ்மித், சாம்சன், உத்தப்பா, ஸ்டோக்ஸ், ஜெய்ஸ்வால் என வலிமையான பேட்டிங்கைக் கொண்டு ராஜஸ்தான் அணி இந்தாண்டு களமிறங்கவுள்ளது. அதிலும் பட்லரின் அதிரடியான ஆட்டம் அணியின் துருப்புச்சீட்டாக இருந்து வருகிறது. இதனிடையே இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்டர் 19 உலகக்கோப்பையில் வெளிப்படுத்திய அபாரமான ஃபார்மினால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

அதேசமயம் போட்டியின் நிலை உணர்ந்து செயல்படும் சாம்சன், ஸ்மித், உத்தப்பா ஆகியோருடன் தொடக்கம் முதலே அதிரடி காட்டும் ஸ்டோக்ஸ், மில்லர் பொன்ற அனுபவ வீரர்கள் அணியில் இடம்பிடித்தால் அது நிச்சயம் வெற்றியை தேடிக்கொடுக்கும் .

டேவிட் மில்லர்

அதேபோல் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனாட்கட், ஆண்ட்ரூ டை, ஓஷேன் தாமாஸ் என வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு இந்தாண்டு ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதில் ஆர்ச்சர், உனாட்கட்டை தவிர்த்து யார் அணியில் இடம்பெறுவர் என்பது போட்டியின் போதே தெரியவரும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பலவீனம்:

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மைதானங்களில் தன்மைகேற்ப ராஜஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதே, அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரேயாஸ் கோபால், மஹிமுல் லமோர், மயன்க் மார்கெண்டேவை தவிர்த்து அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.

மேலும் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அதனால் அவரின் இடத்தை நிரப்பும் சரியான வீரர் அணியில் இருக்கிறாரா? என்பது போட்டிகளின் போதே தெரியவரும்.

ஜெய்தேவ் உனாத்கட்

அதேசமயம் தொடக்க வீரராக பட்லர் களமிறங்குவது உறுதிசெய்யப்பட்டாலும், அவருடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ராபின் உத்தப்பாவுக்கு போட்டியாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக இருப்பதால், இருவரில் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பமும் அணியில் நீடித்து வருகிறது.

எது எப்படியோ அணியின் பந்துவீச்சு ஆலோசகராக சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே செயல்படவுள்ளதால், ஸ்மித் - வார்னே காம்போ ராஜஸ்தான் அணியின் வெற்றிப்பாதைக்கு கம்பேக் தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2020: பலமும்...! பலவீனமும்...! - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details