இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு, லீ - லாரா இணை தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில், லீ 40 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து த்ரிஷா செட்டி களமிறங்கினார்.
அதையடுத்து நிதானமான ரன்களைச் சேர்த்த நிலையில், த்ரிஷா 22 ரன்களிலும், லாரா 69 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மிக்னோன் 44, லூஸ் 12 என ரன்கள் சேர்த்தனர். இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து 248 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ப்ரியா புனியா 20 ரன்களிலும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து பூனம் - கேப்டன் மிதாலி ராஜ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது.